Tamil Language
தாய்மொழிகள் துறை
தமிழ்ப்பிரிவு
எங்கள் குறிக்கோள்/ தொலைநோக்கு
நமது பண்பாட்டை நேசிப்பதோடு மற்றவர் பண்பாடுகளையும் போற்றுதல்.
பாடத்திட்டம்
விரைவு நிலை/ வழக்கநிலை | தமிழ்மொழிப்பாடம் |
வழக்கநிலை தொழில்நுட்பம் | அடிப்படைத் தமிழ் |
வழக்கநிலை தொழில்நுட்பம் | பாட அடிப்படையிலான வகைப்படுத்தல் (SBB) |
வழக்கநிலை | விரைவுநிலைத் தமிழ்ப்பாடம் (SBB) |
உயர்நிலை நான்கு: விரைவு நிலை/ வழக்கநிலை | தமிழ்மொழி “B” பாடம் |
நமது செம்பாவாங் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகள் பள்ளி நேரத்திலேயே நடைபெறும். பள்ளியின் மற்ற நடவடிக்கைகளிலும், இணைப்பாட நடவடிக்கைகளிலும் அவர்களால் பங்குபெற முடியும். பள்ளியிலேயே ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற இயலும்.
கற்பித்தல் முறைகள்
பள்ளியில் மாணவர்களை மையமாகக்கொண்ட கற்பித்தல் முறை (Student-centred Learning) பின்பற்றப்படுகிறது. கூகுல் வகுப்பறை (Google Classroom), காஹூட்(Kahoot), மாணவர் கற்றல் தளம் (SLS) போன்ற பல இணையப்பக்கங்களின் உதவியுடன் சுயமாகவும் (Self-directed Learning) மற்ற மாணவர்களுடன் இணைந்தும் கற்கும் (Collaborative Learning) வாய்ப்புகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தித்தரப்படுகின்றன. மேலும் மாணவர்களின் பல்வேறு கற்றல் திறன்களைக் கருத்தில் கொண்டு வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. மாணவர்கள் மகிழ்வூட்டும் கற்றலில் ஈடுபடுகிறார்கள்.
சிறப்பு நடவடிக்கைகள்
- தேசிய நிலைத் தேர்வு எழுதவிருக்கும் உயர்நிலை 4 விரைவு/ 5 வழக்கநிலை மாணவர்களுக்கான கூடுதல் கற்றல் நடவடிக்கை. (மே மாதம்).
- உயர்நிலை 1 மாணவர்களுக்கான கற்றல் பயணம்
- பள்ளியிலும், பள்ளிக்கு அப்பாலும் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கெடுப்பதற்கான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள்.
- தாய்மொழி இருவார விழா. இந்த இருவார நிகழ்ச்சியின்போது பல்வேறு மொழி, கலாச்சார நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவார்கள்.
- மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள்
தமிழ் ஆசிரியர்கள்
Mdm Kirubakaram
Mr J Parimalam (TL Co-ordinator)
Mdm Kalyani Sree
நடவடிக்கைகள்
![]() பேச்சுத்திறனை வெளிப்படுத்தும் தீபாவளிக் கொண்டாட்டப் படைப்பாளர்கள் |
![]() கலையார்வத்தை வளர்க்கும் தாய்மொழி இருவார விழா நடவடிக்கைகள் |
![]() மரபுடைமையைப் போற்றும் கற்றல் பயணம் |
![]() சிறுகதை எழுதும் திறன் மேம்பாட்டு நடவடிக்கை |
![]() மின்னியல்வழி வாய்மொழித் திறன் மேம்பாட்டு நடவடிக்கை |
![]() மகிழ்வூட்டும் கற்றல் நடவடிக்கை |